இறைமாறிலிருந்து விலக்கம்..! புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

Originally posted 2014-06-28 17:17:29.

இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!

இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!

– மு.அ. அப்துல் முஸவ்விர்

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல. தனது குளிர்நிழலை இறைஉவப்புக்காய் நோன்பு பேணும் மாந்தர் மீது தாரை வார்த்து அவர்தம் வாழ்வை இறைமாறிலிருந்து நீக்கி, இறைஉவப்பின்பால் சாயச் செய்யும் உன்னத மாதம் இது!இறைக்கட்டளையை அழகாய்ப் பேணி,மறுமையில் ஏகஇறையிடமிருந்தே நேரடியாக நற்கூலி பெறும் அருட்பேறுக்கான வழிமுறையாக இருக்கும் இம்மாத நோன்பு நம்மை இறைமாறிலிருந்து விலக்கச் செய்யட்டும்.இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!

இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருத்தலே, புனித ரமளானில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.

இறையச்சத்தை ஏற்படுத்துவதும் அதனைச் செழித்து வளரச் செய்வதும்தான் நோன்பின் முதன்மையான நோக்கமாகும்.இறையச்சம் செழித்து வளர்கின்ற வசந்த காலம்தான் ரமளான் மாதம்!எனவே.இந்த மாதத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதிலிருந்து விலகியிருப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

ரமளான் அல்லாத மற்ற மாதங்களின் இரவுகளிலும் பகல்களிலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதற்கு பொருளல்ல!

ரமளானில் திருக் குர்ஆனுடன் நமக்கிருக்கின்ற உள்ளார்ந்த தொடர்பு வலுப்படுவதாலும் இறைக்கட்டளைகளின்படிச் செயல்பட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் பகற்பொழுது முழுவதும் பசித்திருப்பதாலும் தாகித்திருப்பதாலும், அதன் பிறகு இரவுகளில் நீண்ட நேரம் நின்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவதாலும், அந்தத் தொழுகையின்போது இறைமறை ஓதப்படுவதைக் காதார கேட்பதாலும் ஒரு தனிச் சிறப்புமிக்க உணர்வும் சூழலும் பூக்கின்றது.

இறைப்பற்றின் மணம் கமழ்கின்ற இந்த இனிமையன சூழலில் இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் இட்டுச் செல்கின்ற யாதொன்றையும் விட்;டும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வு, ஆழமும் வலிமையும் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்பதால்தான் இங்கு இந்த விஷயம் குறித்து அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது.

வாழ்வின் எல்லா விவகாரங்களிலும் இறைவனுக்கு மாறு செய்வதைவிட்டு விலகி இருத்தல் அவசியமாகும். ஆனால், குறிப்பாக, மற்ற மனிதர்களுடன் நமக்கு இருக்கின்ற தொடர்பு விஷயத்திலும், பிற சமூக உறவுகளிலும் கூட்டு ஒழுக்கம் பற்றிய விவகாரங்களிலும் இந்த கோணத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!

இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!

ஒருவர் மிகுந்த பேணுதலுடன் நோன்பு நோற்கின்றார்.ஒரு வேளை விடாமல் தொழுகின்றார்.ஆர்வத்துடன் தானதர்மங்களையும் செய்கின்றார்.நாள்தோறும் திருக் குர்ஆன் ஓதுகின்றார்.எல்லாமே செய்கின்றார்.ஆனால், மறுமை நாளில் எந்த நிலையில் வருகின்றார் எனில், முதுகு முறிகின்ற வகையில் மற்றவர்களின் முறையீடுகளையும் புகார்களையும் சுமந்துகொண்டு வருகின்றார்.ஏன் அப்படி..?

எவரையாவது அடித்திருப்பார்,எவரையாவது திட்டியிருப்பார்,எவரையாவது அவமதித்திருப்பார்,எவருடைய மானத்திலாவது கை வைத்திருப்பார்,எவருடய மனத்தையாவது புண்படுத்தியிருப்பார்,எவராவது ஒருவரின் பொருளைத் தின்றிருப்பார்.அவரால் பாதிக்கப்பட்ட எல்லாரும் அவருக்கு எதிராக முறையிடுவார்கள்.அந்த முறையீடுகளும் புகார்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால்தான், அந்தச் சுமை அவருடைய முதுகை முறிக்கின்ற அளவுக்கும் இருக்கும்!

இத்தகைய நபருக்கு என்ன நேரும்?

அவருடைய வணக்கங்கள்,அவர் செய்த நன்மைகள் எல்லாமே அவரால் உரிமை பறிப்புக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிடும் என்றும், இவ்வாறாக, அவருடைய நன்மைகள் எல்லாமே பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகும்கூட, அவர் செய்த அக்கிரமங்களால் பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் முடியாமல் போகும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் அவருடைய கணக்கில் சேர்க்கப்படும் என்றும் இறுதியில் அவர் முகங்குப்புற நரகத்தில் வீசியெறியப்படுவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்; முஸ்லிம்

நோன்பு கடமையாக்கப்படுகின்றது என்கின்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள வசனத் தொடரை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.நோன்பின் மூலமாக அடைய வேண்டிய அடிப்படை நோக்கங்கள் இவைதான் என்று உங்களுடைய மனம் உரத்துச் சொல்லும்.

முதலில், மனித உயிரின் மாண்பு குறித்தும் கொலை வழக்குகளில் பழிவாங்கல் (கிஸாஸ்) குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.பிறகு சொத்தைப் பிரிக்கும்போதும் வஸிய்யத் (மரணசாஸனம்) எழுதும்போதும் நீதி-நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வஸிய்யத்-தைக் கட்டாயமமாக எழதியே ஆக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு நோன்பு,ரமளான் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.அதற்கடுத்த அதே மூச்சில் ஒருவர் மற்றவரின் பொருள்களை அநியாயமான முறையிலும் அசத்தியமாகவும் தின்றுவிடாதீர்கள் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு சில வெளிப்படையான சடங்குகளைப் பின்பற்றுவதுதான் இறைப்பற்று அல்லது புண்ணியம் என்பதல்ல, இறைவனுக்கு அஞ்சி நடந்துகொள்வதுதான் உண்மையிலேயே விரும்பத்தக்கதாகும் எனத் தெளிவுபடுத்தப்பட்டது.அதன் பிறகு இறைவழியில் போர் புரிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.அதேசமயம், இறைவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை என்பதால் போர் புரியும்போதும் வரம்பு மீறாதீர்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

சங்கிலித் தொடரைப் போன்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் இந்தக் கட்டளைகளை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். இறைக் கட்டளைகளின் இந்த சங்கிலித் தொடரில் எந்த இடத்தில் ரமளான் நோன்பு பற்றிய கட்டளை பொருத்தப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகப் புரியும். நோன்பு நோற்று முடித்த பிறகு மற்ற மனிதர்களின் உயிர்,உடைமை,உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் மீது கைவைப்திலிருந்து நீங்கள் விலகி இருப்பதும் அவசியமாகும் என்பது இதிலிருந்து தெளிவாகப் புலனாகும்.

இதனைத்தான், அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் பாவங்களிலிருந்து தப்பிக்க உதவுகின்ற கேடயம் போன்றது நோன்பு என்று வருணித்துளார்கள்.அதனைக் கேடயம் போன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நோன்பாளி கெட்ட வார்த்தைகளைப் பேசுவம் கூடாது

நோன்பாளி கெட்ட வார்த்தைகளைப் பேசுவம் கூடாது

நோன்பாளி கெட்ட வார்த்தைகளைப் பேசுவம் கூடாது.திட்டக் கூடாது.கூச்சலிடக் கூடாது.இரைந்து பேசவும் கூடாது.எவரேனும் ஒருவர் அவரைத் திட்டினாலோ அல்லது சண்டையிட வந்துவிட்டாலோ, ‘நான் நோன்பாளியாக இருக்கின்றேன்.என்னால் இந்தத் தீயசெயல்களில் ஈடுபட முடியாது’ என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகிவிட வேண்டும் என்றும் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்;: புகாரி, முஸ்லிம்

‘உணவருந்துவதையும் பருகுவதையும்விட்டு விலகி இருப்பதற்குப் பெயர் நோன்பு அல்ல! மாறாக, பொய்யையும் பொய்யான செயலையும் கைவிடுவதற்குப் பெயர்தான் நோன்பு’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னொரு நபிமொழியில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்;: புகாரி

நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்! நோன்பு என்பது வயிற்றின் நோன்பு மட்டும் கிடையாது.கண்களுக்கும் நோன்பு உண்டு!காதுகளுக்கும் நோன்பு உண்டு!நாவுக்கும் நோன்பு உண்டு!கை-கால்களுக்கும் நோன்பு உண்டு!இறைவனுக்கு விருப்பமில்லாதவற்றையும் இறைவன் தடுத்துள்ளவற்றறையும் கண்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் கண்களுக்கன நோன்பு ஆகும். இதேபோன்று இறைவனுக்கு விருப்பமில்லாதவற்றையும் இறைவன் தடுத்துள்ளவற்றையும் காதுகள் கேட்கக் கூடாது, நாவு பேசக்கூடாது,உடல் உறுப்புக்கள் செய்யக் கூடாது என்கின்ற ரீதியில் மற்ற உறுப்புக்களுக்கான நோன்புகளையும் விவரிக்கலாம்.

அடுத்ததாக, உங்களிடம் இருக்கின்ற பலவீனங்கள்,குறைகள்,பிழைகள் யாவற்றையும் பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் களைவதற்கும் துறப்பதற்கும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் முயலுங்கள். இந்த விஷயம் சிறியதுதான் என்றாலும் இவற்றின் மூலம் மிகப்பெரும் பணியைச் சாதிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, நாவடக்கத்துடன் தொடங்கலாம்.இனி, ரமளான் மாதத்தில் எவரையும் இரைந்து பேசமாட்டேன்.யாரிடமும் சண்டை போடமாட்டேன்.எவரைக் குறித்தும் புறம் பேச மாட்டேன்.அவருக்கு முன்னாலும் புறம் பேசமாட்டேன்,அவருடைய முதுகுக்குப் பின்னாலும் புறம் பேச மாட்டேன். நன்மையானவற்றைத் தவிர வேறெதனையும் சொல்ல மாட்டேன்.கெட்ட வார்த்தைகளை  சொல்லேன்,கேலி செய்யேன் என்கின்ற ரீதியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.இது சிரமமாகத் தேன்றலாம்.ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்தால் இது மிகவும் எளிதாககிவிடும்.

நாள்தோறும் இரவு படுக்கப் போகின்ற வேளையில் இது குறித்து சுயமதிப்பீடு செய்யுங்ள்.ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால் உடனடியாக பாவமன்னிப்புக் கோருங்கள்.

புனித ரமளானைப் பயன்படுத்தி வரக்கூடிய ஏனைய பதினோரு மாதங்களையும் உங்களுடைய இறைவிருப்ப வாழ்வுக்கான களமாக ஆக்கிக் கௌ;ளுங்கள்! இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்!

Related Post