app

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்..?

அபூ உமர்

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன்

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன்

பியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.”

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.

நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.

ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).

 

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.