யார் இந்த முஹம்மத்..? (ஸல்) – 1

Originally posted 2015-05-06 21:58:56.

-மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்  

-தமிழில்:மு.அ.அப்துல் முஸவ்விர்

நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.

நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.

(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்! அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான்.

அரபியர் வசித்த நிலப்பரப்புக்கள்

அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸினாய் மலையும், கிழக்கே அரபியவளைகுடாவும் ஈராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப் பெருங்கடல் வரை தொடர்கிறது),வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் ஈராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன.
அரபிய தீபகற்பத்துக்கு புவிஇயல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு இப்புவிஇயல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்தரமானவர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களுக்கு அருகாமையில் மாபெரும் இரு வல்லரசுகள் (ரோம்-பாரசீகம்) இருந்தும் அவை இப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போனதற்கு இந்த இயற்கையான புவியியல் அமைப்பே காரணம்!
அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில்அமைந்திருக்கின்றன. அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் ,ணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப் பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது. அவ்வாறே, ஒவ்வொருகண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன. இப்புவிஇயல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும், வணிகம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும்
திகழ்ந்தன.

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் துவங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

1.முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெற்ரிருக்கவில்லை.மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.

2.குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.
முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: எமன், கஸ்ஸான் மற்றும் ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர இருந்த வேறு சில அரசர்கள் எவரும் முறையாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை.
அரபு தீபகற்பம் பல்வேறு குலங்கள் மற்றும் கோத்திரத்தாரைக் கொண்டிருந்தது.இவர்களின் தலைவர் அந்த கோத்திரத்தார் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்ட்டு ஒரு குட்டி அரசாகச் செயல்பட்டனர்.அவை கோத்திரத்தின் கூட்டுப் பொறுப்புணர்வு மற்றம் நிலம்,இராணுவம் ஆகியவற்றில் சொதுவான விருப்பங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன.இந்தத் தலைவர்கள் முடிசூட்டப்பட்ட மன்னர்களைப் போன்ற ஏதேச்சதிகார இலாபங்களைப் பெற்றிருந்தனர். சமாதானம் மற்றும் போர் ஆகிய இருவேறுபட்ட சூழல்களிலும் முழு கீழ்ப்படிதலுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டனர்.
எனினும் ஹிஜாஸ் எனும் பிரதேச ஆட்சியாளர்கள், அரபியர்களின் மத்தில் மிகவும் மரியாதைக்குரியவர்களாகவும் கண்ணியத்துக்குரியவர்களாகவும் மதிக்கப்பட்டனர்.மேலும் சமயக் கேந்திரத்தின் புரவலர்களாகவும், பணியாளர்களாகவும் கருதப்பட்டனர்.ஹிஜாஸ் பிரதேச ஆட்சியாளர்கள் அரசாங்க ரீதியான மற்றும் மார்க்க ரீதியிலான பிரதிநிதித்துவக் கலவையாக இருந்தனர். புனித கஅபா-வை தரிசிப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும், இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறைகளை செயற்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.

Related Post