அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! – 3

Originally posted 2018-03-01 16:51:33.

இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?

னித உருவில் இறைவனை அவதாரம் எடுப்பவனாக ஆக்கி, பூஜிப்பதையும் இஸ்லாம் தடுக்கின்றது.
இறைவனுக்கு “அல்லாஹ்” எனும் பெயரைச் சூட்டியிருப்பதே
இறைவனுக்கு இணையானதாக எந்தவொரு படைப்பினத்தையும் ஆக்காமல் இருப்பதற்காகத்தான். ‘அல்லாஹ்’ எனும் சொல்லுக்கு பால் வேறுபாடோ, பன்மைத் தன்மையோ (புநனெநச ழச Pடரசயடவைல) இல்லை.
எப்பொருளையும் இறைவனுக்கு இணையாக்குவதை (ஷிர்க்) எனும் இiணைவத்தல் என்று இஸ்லாம் வருணிப்பது மட்டுமின்றி, அதனை மன்னிப்பே இல்லாத பெரும்பாவம் என்று சொல்கின்றது.
இறைவன் தன் படைப்புகள் போன்றவனல்லன். படைப்புகள் அழியக்கூடியவை. ஆனால் இறைவனோ நித்திய ஜீவன். (நுவநசயெட). அவன் நித்திய ஜீவனாக இருப்பதால் அவனை யாரும் உருவாக்கவோ, அல்லது அவனுக்கு துவக்கமோ இல்லை. எனவே அவன் என்றென்றும் நிலைத்திருப்பவனாக (நுஎநசடயளவiபெ ) இருக்கின்றான். ஆதியும் அவனே! அந்தமும் அவனே! மேலும் எல்லாப் பொருளையும் படைத்து பரிபாலனம் செய்யக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
“அல்லாஹ் அனைத்து பொருள்களையும் படைத்தலனாக ஆவான். அவனே எவ்வேறு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். வானங்கள் மற்றும் பூமியுடைய கருவூலங்கள் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் இழப்புக்குரியவர்கள்
(திருக் குர்ஆன் 39:62,63)
“உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும் சென்று சேரும் இடத்தையும் இறைவன் நன்கறிவான்….”
(திருக் குர்ஆன் 11:06)

இறைவனின் பண்புகள் :
அழிவில்லாத ஒரு நித்திய ஜீவனாக படைப்பாளன் இருக்கும்பொழுது அவனுடைய பண்புகளும் நிரந்தரமாகத்தான் இருக்கும். அதனை விடுத்து நிலையான குறையில்லா ஆற்றலும் உடைய இறைவனுக்கு புதிய சக்திகளும், ஆற்றல்களும் தேவையே இல்லை. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட சம ஆற்றல், சக்தி உள்ள படைப்பாளனை நினைக்கும்போதே அதன் அவசியமின்மை நமக்குத் புரிகின்றது.
திருக் குர்ஆன் இந்த வாதத்தை இவ்வாறு முன் வைக்கின்றது
“அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தன் படைப்புக்களை அழைத்துக்கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும் ஒருவர் மற்றொருவரை மேலோங்க முனைந்து கொண்டிருப்பர்…..”
(திருக் குர்ஆன் 23:91)
“வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத்தவிர மற்ற கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுக்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்
(திருக் குர்ஆன் 21:22)

Related Post