app

இணைவைப்பின் இறுமாப்பு!

 

தன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன்

தன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன்

ன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன் இன்ன பிறவற்றை இணையாக்கும் வகையிலான செயல்பாடுகள், ஒரு மனிதனை செருக்கின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. காரணம் அவன் இறைகொள்கைக்கு எதிராக தனது மனோ இச்சையை முன்னிறுத்தி செயலாற்றுகின்றான். எனவே, அது அவனை செருக்கின் ஆழத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றது. படைத்தவனுடன் இன்னபிறவற்றை இணையாக்கும் இத்தகைய செயல் இறைவனால் மன்னிக்கப்படுவதே இல்லை, அவன் அதிலிருந்து மீண்டு ஏகஇறைவனிடம மட்டுமே சரணடையாத வரை..!

இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது! இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ்!ஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லை! இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள்!அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாது! திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே!’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்ன?எனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே!’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!’ திருக் குர்ஆன் 31:13 ஏன குறிப்பிடுகின்றான். இவ்வாறு இணை வைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மனிதன் செய்யக்கூடிய பாவங்களை அவன் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் றாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், அந்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றான்:-திண்ணமாக தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை.இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுவான்’ திருக் குர்ஆன் 4:48

 

 

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.