இந்துவின் பார்வையில்…விதி..? 1

Originally posted 2015-08-24 15:08:09.

செந்தில்

விதி குறித்த ஒரு இந்துவின் பார்வை

விதி குறித்த ஒரு இந்துவின் பார்வை

விதி குறித்த ஒரு இந்துவின் பார்வை இங்கே.,!

ழ் என்றால் விதி. விதி என்றவுடன் பலருக்கு அச்சம் பற்றிக்கொள்கிறது ஏனனில் நாம் நன்மையென கருதுவதை அதிர்ஷ்டம் எனவும், தீமையென கருதுவதை விதி என்றும் குறிப்பிடுகிறோம் ஆனால் நன்மை தீமை இவ்விரண்டுமே விதி வழியே அமைகிறது.

ழங்காலந்தொட்டு நவீன காலம் வரையிலும், வர்ணாஷ்ரம-மனு நீதி காலம் தொடங்கி தற்க்கால மக்காளாட்சி வரையிலும், சாமானியர்களையும், சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும், மத-வேதாந்த போதகர்களையும் பேசவைக்கும் ஒரு விவாதம் “விதியா? மதியா? அதாவது விதியை மதி வெல்ல முடியுமா? என்பது”. இது விஜய் தொலைக்காட்சியையும் விட்டு வைக்கவில்லை. இந்த விவாதத்தை ஓரளவுக்கு அறிவார்த்தமாக நடத்த முயன்றதற்க்காக விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு பாராட்டுடன், இந்த விவாத தலைப்பு குறித்து எனது கருத்துகளை வரைகிறேன். விதி-மற்றும் மதி குறித்து விவாதிப்பதற்க்கு ஆய்வுக்குரிய-அணுகுதற்குரிய தளம் (level of analysis/level of intervention), மிகவும் முக்கியம். அதாவது, விதி குறித்த கருத்தாக்கமும், பாதிப்பும், தனி-மனித தளத்திலும், சமூக தளத்திலும், மனித வாழ்வு-உயிர் என்ற தளத்திலும், இயற்க்கை-சூழல் என்ற தளத்திலும், புவி (கோள்)-மற்றும்-பிரபஞ்சம் என்ற தளத்திலும் வெவ்வேறு வித தாக்கங்களை ஏற்படுத்த வல்லது.

“விதி” குறித்து பல வித புரிதல்களும் விளக்கங்களும் நிலவுகின்றன. ஒரு வித “மகா சட்ட-விதி” என்றோ, “தளராத – தவிர்க்க இயலாத பிரபஞ்ச இயக்கவிதி” என்றும், முன் வினை பயன் (காரண-விளைவு என்ற பொருளில்) என்றும், முன் பிறவி பயன் என்ற பொருளிலும் (karma-fate), முன் நிர்ணயம் செய்யபட்ட பாதைகள்-நிகழ்வுகள் (predetermined/path dependence) என்றும் ‘விதி’ குறித்து பல கருத்துகள் உண்டு. குறிப்பாக, மத அல்லது இறை நம்பிக்கையை ஊன்று கோலாக, வாழ்க்கையின் அடிப்படை தத்துவமாக கொண்டுள்ள மக்களிடம் ‘விதி’ குறித்த ஆழமான, உறுதியான கருத்துகள் உண்டு.

வாழும் உயிரினங்களின், மனிதன் உட்பட, வாழ்க்கையில் நிகழும் சம்பவங்க்களையெல்லாம் ‘விதி’ என்று சொல்வது அபத்தம் ஆகும். தனிமனித தளத்தில், மனித கட்டுப்பாடுக்குள் அடங்காத, விவரிக்க முடியாத விளவுகளை (effects, outcomes), ‘அதிர்ஷ்டம்’, அல்லது ‘விதி’ என்றோ மனித மனம் காரணபடுத்துகிறது. உளவியல் நோக்கில், மனதை “சமாளிக்கும் திறன்” அல்லது “தேற்றிக் கொள்ளும் முறை” என்றோ இதை கூறலாம். ஆனால், நன்றாக சிந்தித்து செயல் ஆற்றும் நிலையில் உள்ள மனிதனை, இத்தகைய பார்வை எந்த ஒரு நல்வினையையும் ஆற்ற விடாமல் தடுக்குமாயின், இது மனிதன் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும், நிலையினை உருவாக்கும். இந்த வகையில், “முயற்சி திருவினையாக்கும்” என்ற வள்ளுவனின் சொல் எத்தருணத்திலும் செல்லும். எதிர் பார்த்த “சுய வெற்றிகள், பலன்கள்” கிட்டாவிடினும், நல் முயற்சி, நல் வினைகள், நல்ல பொது-பலன்களை உருவாக்கும். மேலும், தனி-மனித தளத்தில் கட்டுக்குள் அடங்க மறுக்கும் காரண-காரணீகள், மற்றொரு தளத்தில், பிறருடைய/புற சக்திகளின் கட்டுக்குள் அடங்கியிருக்ககூடும். ஒருவனுடைய விதி, மற்றொருவனின் அதிகாரத்திற்கு உட்பட்ட (அல்லது) அறிவுக்கு இதுவரை புலப்படாத, அடங்காத இயற்கை சக்திகளின் வினையோ, பகடையாட்டமாகவோ இருக்ககூடும். ஒருவனுடைய விளையாட்டு அடுத்தவனுடைய விதியாக முடியும்(one man’s game could be another’s fate). பொருளாதார சித்தாந்தங்களிலும், பொருளீட்டுவதில் வெற்றி காணுவதிலும் அதீத பற்று கொண்டுள்ளவர்கள், இத்தகைய நிலையை நியாய படுத்த சொல்ல ஆரம்பித்திருப்பது “வல்லவன் வெல்வான்” ( survival of the fittest).

Related Post