– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 3
1.1 வரையறைகள்
ஃபிக்ஹ்: ஆதாரப்பூர்வமான மூலங்களிலிருந்து பிரித்து பெறப்பட்ட, மார்க்க வழிமுறைகளுக்கான சட்ட வடிவைக் குறித்துப் பேசும் அறிவியல் இது.இன்னொரு வார்த்தைகளில் சொல்வதென்றால், மனித அறிவுக்கு எட்டும் வகையில் செயல்ரீதியாக அமல்படுத்தப்படும் ஷரீஅத் எனும் மார்க்க சட்டங்கள் இவை!தூய்மையும் தொழுகையும் – 3 ஷரீஅத்: இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திருக் குர்ஆன் மற்றும் நபிவழி மூலம் தரப்பட்ட இறைவழிகாட்டுதல்களைக் குறிக்கும்.இறைநம்பிக்கை மற்றும் அதன் செயல்முறை வெளிப்பாடு ஆகியவற்றையும் இது தன்னுள் கொண்டது.
1.2 இஸ்லாமிய சட்டங்கள்-ஷரீஅத்-துக்கும் மனித சட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள்!
1. இறை மூலத்துக்கும் மனித மூலத்துக்கும் இடையிலான வித்தியாசம்
2. இம்மை-மறுமையில் ஏற்படும் விளைவுகளுக்கும் இம்மையில் மட்டும் ஏற்படும் விளைவுகளுக்கும் இடையிலான வித்தியாசம்.
3. தனிப்பட்ட ஆளுமைக்காக அல்லாஹ்விடத்தில் தர வேண்டிய சுயகணக்கிற்கும் சட்டங்களுக்கு விசுவாசமாக இருத்தலுக்கும் இடையிலான வித்தியாசம்.
4. படைப்பினங்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலான சரியான அளவுகோலுக்கும் பயனுள்ளதோ அல்லது பயனற்றதோ அமையக்கூடிய பொதுக்குருத்துக்கும் இடையிலான வித்தியாசம்!