இஸ்லாம் பற்றி சில சுலோகங்கள்..!

Originally posted 2015-01-30 22:20:45.

அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.
குரான் கூறுவதை கேளுங்கள்:-
என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)
பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)
இதேபோல் பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)
சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)
குரான் கூறுகிறது; இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)
பகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)
திருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)
பகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)
ஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.
பகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (ஊhயிவநச-6) இரண்டாவது காண்டத்தில் (ளுநஉவழைn-2) வசனம் ஒன்று (ஏநசளந ழே.1) இவ்வாறு கூறுகிறது.
‘ஏகம் எவதித்யம்’
‘இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே’
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
‘நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா’ அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
‘நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே’
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

Related Post