ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

– இப்னு கலாம் 

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20

மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ”எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்”.

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

1. உபநிஷங்கள்:

உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்சந்தோக்ய உபநிஷம்

சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

”ஏகம் எவதித்யம்”

”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”

உபநிஷங்களின் தொகுப்பு – எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது

(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

  1. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)

”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

  1. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)

நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

  1. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)

ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

Related Post