app

சுலோக உண்மைகள்..! 2

–  இப்னு கலாம் 

முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது.

முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது.

சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

  1. சமஸ்கிருத வார்த்தை”நரஷன்ஸா” என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ”கௌரமா” சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.
  2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத்தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).

மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ”ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்”

  1. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும்”அஸ்ரத்துல் முபஷ்ஷரா” ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி),உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூஉபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான,  போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி,பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)

”ரெப்ஹ்” என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.

  1. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.

குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது,தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் – ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.