பல்வேறு மதங்களில் திருமணக் கண்ணோட்டம்..!

Originally posted 2014-05-12 17:57:03.

 

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

ண்மையில் நடந்த ஒரு திருமணத்தின் அவலமிது!

அழகிய அந்த அனங்கையும் தன் வாழ்வு செழிக்க இங்கு கால் பதித்தவள்!மணமுடிக்காத முப்பது வயது அழகிய மங்கை அவள் ஒரு அநாதையும்கூட!

அந்த மங்கையை மணமுடிக்க அவனின் பகீரதப்பிரயத்தனங்கள்  தொடர்ந்தன..!இறுதியில் நிறைகளுடனும் நிம்மதியுடனும் வாழ்க்கையில் கரம் கோருகின்றனர் வௌ;வேறு தேசத்தவர்களான அவ்விருவரும்! ஏவ்வித குறைகளுமின்றி வாழ்க்கையில் நடத்தப்படுகின்றாள் அவள்!அவனிடமிருந்து வந்த அன்பிற்கும் கவனிப்புக்களுக்கும் வரம்புகளே இருக்கவில்லை. கௌரவமும் ஆழமான அன்பும் கொண்டோடியது அவர்களது வாழ்க்கைச்சக்கரம்!

அவள் நல்ல இல்லத்தரசியாகவே வாழ்ந்தாள்.காலங்கள் வாழ்க்கை ரதத்தைத் தள்ள, திடீரென்று பள்ளத்தில் சிக்கிய ரதமாக அவனின் இன்னொரு வாழ்க்கை தெரியவருகின்றது அவளுக்கு!அப்போதும் அவனின் உபசரிப்புக்களிலும் உண்மைக் காதலிலும் துளியளவு குறையும் இருக்க வில்லை.

ஆனாலும் அதற்குப் பின்னால் அவனுக்கு மற்றொரு முகம் தென்பட்டது அவளுக்கு! அவனுடைய அந்த சுயஉருவம் என்ன? ஆம்! அவன் குவைத்திலும் மற்றொரு வளைகுடா நாட்டிலும் வணிகம் புரிந்து, ஒரு சமூக அந்தஸ்தும் மதிப்பும் கொண்டவன். ஆனால் அவன் இந்த நங்கையை மனைவியாக்க ஆசைப்பட்டது குவைத் வாழ்க்கைக்கு மட்டும்! அவனுக்கு மனைவி எனும் உறவு தேவைப்பட்டது இந்த மண்ணுக்கு மாத்திரமே! ஏனெனில் அவனுடைய சொந்த நாட்டில் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொண்ட ஒரு குடும்பஸ்தன் அவன்! உலகத்திற்கு அறியப்பட்டதாக அவர்களது திருமணம் இருக்கக் கூடாது என்பதே அந்த சுயநலக்காரனின் குறுக்குப் புத்தி! சுக்குநூறானாள் அவள்! கல்யாணக் கனவு கைகூடியும் கனவாகி கானல்நீரானது அவளுக்கு..!

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

ஆம்! நிறைவு பெறாத மனிதவாழ்வை ஒரு முழமையை எய்தச் செய்யும் வாழ்க்கை ஒப்பந்தமே திருமணம் என்பது!

திருமணம் ஒரு அத்தியாவசிய சமூக தெவையாகும்.இறைவகுத்த இந்த அதிமுக்கிய தேவையின் மூலமே குடும்பம்  எனும் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படுகின்றது. அதன் பல்துறைகளாக உறவுகள் வகுக்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, இந்த திருமணம்தான் முன்னறியாத இருபாலாரக்கிடையில் உறவை புனிதப்படுத்தி இணைக்கின்றது. மனிதவாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கின்றது.

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

திருமணங்கள் சுவனத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.. என்பர் ஒருபுறம்!

இயந்திரமயமான உலகில் தெவைக்குரிய ஒர இளைப்பாறலே திருமணம் அன்றி, அது உறவப்பாலமாக நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனும் சாரார் மறுபுறம்!

இந்த சர்ச்சையெ வேண்டாம். தனியே வந்தோம்.., தனியே போவோம் என்று மணத்தை மனம் வெறுக்கும் சாரார் இன்னொருபுறம்!

எது எப்படியிருந்தாலும், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட, தாங்கள் இவ்வுலகில் ஜனித்த வழிமுறை அறிந்திருப்பதால்.. தம் பேர் சொல்ல ஒர பிள்ளைக்காவது திருமணத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம்!

ஆம்! உரைநடை வழக்காக இயல்மரபில் நடைபொடும் வாழ்க்கையை, ஒரு இனிய கவிதையாக..,ஊடல்கள்,சாடல்களின் நாடகமாக அரங்கேற்றி.. அதனை மத்தமிழின் கனிசுவைபோல் இனிக்க செய்யும் வல்லமை திருமணத்துக்கு உண்டு!

ஆந்தொ..!

நுவநாகரிக உலகில் இந்தப் புனிதம் எவ்வாறு நோக்கப்படுகின்றது?

இன்றைகளில் இது சம்பிரதாயச் சடங்குகளைக் கொண்ட கோலாகால விழாவாக மாறியுள்ளது கண்கூடு. நிமிடங்களில் நடந்தேற வேண்டிய ஒரு எளிய நிகழ்வு ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதங்கள்கூட வாழாது போகின்றனர் அந்தத் தம்பதியினர். இல்லையெனில், மனக்கசப்புக்களும் மாற்றுக் கருத்துக்களுமாக அவர்களது வாழ்க்கைப் பயணம்!

செல்வச்செழிப்பில் செழியும் செல்வந்தருக்கு இது ஓர் ஆடம்ப-அகங்கார விழா.!

வரகவ்கும்-செலவுக்கும் பட்டியல் போடும் நடுத்தரத்தினருக்கு இது ஒரு கடின விழா!

அன்றாடங்காய்ச்சிகளாய் அனுதினமும் வாழ்க்கையை எதிர்நோக்கும் ஏழைகளுக்கு அது ஒரு கனவு விழா!

எண்ணிப் பார்க்கவே உள்ளம் உருகச் செய்யும் அவல கோலங்கள் சமூக அவமானங்கள் இவை!

மேலும் சிலருக்குத் திருமணத்  தகுதி அழகு மட்டுமே! அதிலும் வெண்மைக்கு விஷேசம்!தோல் வைத்து பேரம் பேசும் சமூகம்! நிறம் கொஞ்சம் பின்தங்கிவிட்டாலே சீதனம் கொளுத்திருக்க வேண்டும்.திருமணத்துக்கு முன்னர் எத்தனையோ நேர்முகத்தேர்வுகள்.., பரீட்சைகள்.., பரிசோதனைகள்…!எல்லா நிலைகளையும் தாண்டி சத்திர சிகிச்சைகள்! இவையெல்லாம் பெண்ணுக்கு மட்டுமே!

ஆணுக்கோ.., ஒழுக்கமும் தேவையில்லை..! அழகும் அவசியமில்லை! வாழ்க்கை நடத்த வேலையும் வேண்டாம்!வாழக்கை நடத்த எந்தத் தகுதியும் வேண்டாம்! ஏன்? இந்த புறக்கணிப்பு? அம்! அவனுக்கு தான் ஆண்; எனும் இறுமாப்பு!

இவ்வாறு பல்வகை முகங்களுடன் திருமணம் நம் மத்தியில்..! இத்தனையும் கடந்து கைகோர்க்கும் இருவரும் வாழ்க்கையை வாழ்கின்றனரா..? இல்லை.., வையவல்லவோ செய்கின்றனர்..! ஆணின் ஒழுக்கம் புறக்கனிப்பு.

தத்தமது சொந்த நாடகளிலேயே இத்தனை வர்ணஜாலங்கள் காட்டும் திருமணம், கடல்கடந்து… கேட்க ஆளில்லாத தைரியத்தில் விளையாட்டு சாதனமாக மாறியிருப்பது ஆச்சர்யப்படத்தக்கதல்லவே!ஷ

விளைவு..?

புனித உறவுகள் இன்று ஒப்பந்தப்பணியாக மாறிக் கொண்டிருக்கும் அவலம்! திருமணம் என்பது இரு உடல் கலவை என நினைக்கும் தரப்பினர் ஒரு புறம்! பெண்ணின் புனிதப் படைப்பே இதன் நோக்கம்தான் எனும் தரங்கீழ்நிலைக் கண்ணோட்டம் மறு புறம்! ஆயிரங்காலத்துப் பயிர் எனப் போற்றப்படுகின்ற அழகிய உறவு.., தேவைகள் எனும் நச்சுக்கள் கலந்த போலி அன்பு கொண்ட செயற்கை குரோட்டன்ஸ் செடியாக வளர்க்கப்படுகின்றது.

ஏன் இப்படி??

ஆம்..! உடல்சார்ந்த தேவையாக மட்டுமே இந்த புனித உறவை நோக்கும் சமூகம், அதன் தாத்பர்ய வரைவிலக்கணத்தை அறியத் தவறிவிட்டது.

குழந்தைக்கு விளையாட ஒரு பொம்மை எபபடியோ, அப்படிப்பட்டதல்ல திருமணம்!சமூகம் தப்புக்கணக்ககு போட்டதன் விளைவுதான் இன்றைய திருமணங்கள.! வெறுமனங்களாகி நிற்கும் அவலம்! புனிதமாகக் காணப்பட வேண்டிய இந்த உறவை வெறும் ஹார்மோன் தொல்லையாக.. அதற்குரிய நிவாரணியாக மட்டுமே மனிதர்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!

ஏன் இப்படி?

ஏதற்கு இத்தகைய ஈன வழமைகள்?

ஏப்படி வந்தன இந்த கீழ்த்தர எண்ணங்கள்?

உண்மை திருமணம் யாது? ஆதன் தலைமேல் தாத்பர்யம் என்ன?

தொடரும்.. 1

Related Post