மலக்குகள் அல்லது வானவர்கள் (ANGELS) ..!

–  இப்னு கலாம் 

மலக்குகள் அல்லது வானவர்கள்

மலக்குகள் அல்லது வானவர்கள்

இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.

இந்துவத்தில் புனித நூல்கள்
இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.

ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை 1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.

ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘ஸ்மிருதி’ என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.

Related Post