யுவனிலிருந்து காலிக்..!

Originally posted 2014-05-30 16:11:36.

யுவனிலிருந்து காலிக்..!

httpv://youtu.be/norKaFRNBN4

(நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது. 

இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று வாரிசுகள் இருக்கிறார்கள். மூவருமே படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள்.

முதலில் சுஜயா என்ற பெண்ணை திருமணம் செய்தார் யுவன் சங்கர் ராஜா. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். பிறகு ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். யுவனுக்கும் ஷில்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதாக தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

” நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை” என்று கூறியுள்ளார் யுவன்.

Related Post