வேதவெளிப்பாடு எவ்வாறு இந்துமதத்தில்..?

-முஹம்மது ஜலீல் மதனி

வேதவெளிப்பாடு எவ்வாறு இந்துமதத்தில்..?

வேதவெளிப்பாடு எவ்வாறு இந்துமதத்தில்..?

வேதவெளிப்பாடு எவ்வாறு இந்துமதத்தில்..? என்பது பறறிய அறிவுக்கு இந்துமதத்தில் இஸ்லாம் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் சரியாக இருக்கும்.

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்

அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய

ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல

மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா

(- அல்லோப நிஸத்.)

பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். சிவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.

இந்து வேத ஆதி மூல நூல்களில் கடவுளைப் பற்றி கடவுளின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இன்றைய இந்துக்களில் பல கடவுள் கொள்கை வழிபாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிறைந்துள்ளன என்பதை இந்து வேத மூல நூற்களை வாசிக்கும் போது நீங்களாகவே முடிவு செய்து கொள்வீர்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அதுபோலவே இந்து மூல நூற்களில் கடவுளைப் பற்றிக் கூறுப்பட்ட அனைத்து தன்மைகளும் இஸ்லாத்தின் கடவுள் கோற்பாட்டுக்கு ஒத்துப் போவதையும் நீங்கள் உணர முடியும்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் ‘ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகாள்’ எனப் பாரதியார் சாடுகின்றார்.

-நன்றி: இஸ்லாம் கல்வி இணையதளம்

Related Post