– இப்னு கலாம்
மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்
ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.
- இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)
- கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.
- அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.
குர்ஆன் கூறுகிறது:
74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.
-நன்றி: இஸ்லாம் கல்வி இணையதளம்