Originally posted 2018-07-06 18:48:01.

மகளிரின் உண்மை கண்ணியம் எதில் இருக்கின்றது என்பது குறித்து இந்து மதம் சரியானதொரு பார்வையை மன்வைக்கவில்லை.
மகளிரின் உண்மை கண்ணியம் எதில் இருக்கின்றது என்பது குறித்து இந்து மதம் சரியானதொரு பார்வையை மன்வைக்கவில்லை.பெண்ணை ஒரு போகப் பொருளாக, ஒரு ஜடப்பொருளாக கண்டு வருகின்றன இந்துத்துவ தத்துவங்கள் என்பதற்கு அவற்றின் வேதநூல்களே சாட்சியாக இருக்கின்றன.ஆனால், இஸ்லாம் மகளிரின் கண்ணியத்துக்குக் கட்டியம் கூறுகின்றது. தாயின் காலுக்கடியில் சுவனம் உள்ளது என்று கூறி மகளிர் கண்ணியத்தை வானளவுக்கு உயர்த்தியது.
அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர்.
இறைவனின் இறைத்தூதர்களான மூசா (அலை), ஈசா (அலை) ஆகியோரும் பெண்களினதும் ஆண்களினதும் தப்பான ஆபாச உடைகளுக்கும், தீய பாலியல் தொடர்புகளுக்கும் வழிகாட்டவில்லை. ஓரினச் சேர்க்கைகளுக்கும், ஒருபால் திருமணங்களுக்கும் அனுமதியளிக்கவில்லை. ஈசா(அலை) அவர்களின் தாய் மரியம்(அலை) அவர்களும் அன்று வாழ்ந்த பெண்களில் மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புடைய கற்புடைய பெண்ணாகவே வாழ்ந்தார்கள். இன்று மேற்கு உலகம் அறிமுகப்படுத்தும் ஆபாசமான, ஆண்களின் காட்சிப் பொருளாக பெண்கள் இருக்க வழிகாட்டவில்லை. முன்னைய இறைதூதர்கள் கொண்டுவந்த இறை நெறிநூல்கள் செயல் அற்றுப் போனபோது, மக்களை அந்த நேர்வழியில் தொடர்ந்து வழி நடத்துவதற்கு அல்லாஹ், இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் கொண்டு வழிகாட்டினான்.
உலகில் அன்று வாழ்ந்த இறைத் தூதர்களும், இறை நெறிநூல்களும் ஆண் பெண் நல்வாழ்வுக்கு நல்ல வாழ்க்கை வழிமுறைகளையே போதித்தனர். பெண்களை ஆண்களின் அடிமையாக வாழ வழிகாட்டவில்லை. அத்துடன் பெண்கள் ஆண்களின் கைப்பாவைகளாக வாழும்படி குறிப்பிடவில்லை. ஆனால் மதம் என்ற போர்வையில் சில தீய அரசர்களின் தாளத்திற்கு ஆடும் போலி மத போதகர்களே ஷைத்தானின் தூண்டுதலினால் இறை தூதர்களின் அல்லது போலிக் கடவுள்களின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை உள் நுழைத்தனர். இதனால் பெண் குழந்தைகள் பக்தியின் பெயரால் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீதேவிகளான(?) பெண் குழந்தைகள் சமுதாயத்தில் மூதேவிகளாக(?) மாற்றப்பட்டனர். கணவன் இறக்கும்போது பெண்களும் தீயில் கட்டையேற பணிக்கப்பட்டனர். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டனர். பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது. பெண்களை எல்லா சகோதரர்களும் மனைவியாக வைத்திருக்கும் வழக்கமும் காணப்பட்டது. பக்தியின் பேரால் பெண்கள் சிலைகளை நிர்வாணமாக வலம் வரும் சடங்குகள் அறிமுகமாகி இருந்தது. விபச்சாரம் பெண்களைச் சீர்கெடுத்தது. அரை நிர்வாணமாக பெண்கள் ஆண்களின் முன் நடனமாட ஊக்குவிக்கப்பட்டனர். இன்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அரைகுறையாக ஆடையணிந்து நடனமாடும் காட்சிகள் காட்டப்படுவதைக் காணலாம். இறைவனின் விபச்சாரத் தண்டனைகள் ஏழைகளுக்கு மட்டும் வழக்கிலிருந்தது. செல்வந்தர்கள் தப்பு செய்தால் கண்டு கொள்ளப்படவில்லை. அழகு ராணிப் போட்டி என்ற பெயரால் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
விதவைகள் மறு மணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர். விதவைகள் நல்ல வைபவங்களில் பங்கு கொள்வது கெட்டசகுனமாக கருதப்பட்டது. சில சமூகங்களில் குமரிப் பெண்கள் வீட்டில் சில காலம் மறைத்து வைக்கப்படும் வழக்கமும் காணப்பட்டது. சில சமூகப் பெண்கள் அரைகுறை ஆடையணியவே கட்டாயப்படுத்தப்பட்டனர். இலங்கையில் காணப்படும் சீகிரியா பெண்கள் ஓவியங்கள் பணிப் பெண்கள் எப்படி உடையணிய பணிக்கப்பட்டனர் என்பதற்குச் சான்றுகளாகும். உரிய பாதுகாப்பின்றி பெண்கள் வெளியே செல்லப் பணிக்கப்பட்ட போது பெண்கள் தமது கற்பை இழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தன. பெண்கள் திருமணத்தின் போது சீதனக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர். கணவன் செய்யும் கொடுமைகளை சாகும் வரை சகித்து வாழவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. அவர்கள் விவாகரத்து செய்வது பாவமாகக் கணிக்கப்பட்டது. இக்கொடுமைகளுக்கு 1434 ஆண்டுகளுக்கு முன் ஏக இறைவனின் இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் சாவுமணி அடித்தன. இஸ்லாம் மார்க்கம் பெண்களை எப்படிக் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை அவதானியுங்கள்.
ஆண்களையும் பெண்களையும் சமனாக கருதிப் போதனை செய்யும் மார்க்கம் இஸ்லாம்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் :- 33 : 35 )
ஆகவே அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சமமாக கருதியே பொதுவான போதனைகளைச் செய்கின்றான். இஸ்லாத்தில் ஆண் பெண் வேறுபாடு பொதுவான செயற்பாடுகளில் இல்லை. அத்துடன் அல்லாஹ் இப்படியும் இருபாலாருக்கும் எச்சரிப்பதையும் காணலாம்.

மகளிரின் உண்மை கண்ணியம் எதில் இருக்கின்றது என்பது குறித்து இந்து மதம் சரியானதொரு பார்வையை மன்வைக்கவில்லை.