Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

விண்ணுலகப் பயணம் 2

Originally posted 2018-07-06 18:48:28.

விண்ணுலகப் பயணம் 2….
விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…

விண்ணுலகப் பயணம் 1
கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…

17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மூஸா நபி, ஈசா நபி ஆகிய இரு தூதர்கள் அனுப்பப்பட்ட இரு வாய்ப்புகளையும் நீங்கள் முறையோடு பயன்படுத்திக் கொள்ளாமல் இறைவனின் சினத்திற்கு ஆளாகி இரண்டு முறை மாபெரும் தண்டனைகளுக்கு ஆளாவீர்கள். இப்போது மூன்றாவதும் கடைசியுமான வாய்ப்பு அண்ணலாரின் வடிவத்தில் நீங்கள் பெருவாரியாக வாழும் மதீனா நகர் நோக்கி வரவிருக்கிறது. இந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், உங்களுக்கு வேறொரு வாய்ப்போ, வழியோ பிறக்கப் பேவதில்லை என்றும், இறைவனின் மிகப் பெரும் தண்டனைக்கு ஆளாவீர்கள் என்றும் இஸ்ரவேலர்களுக்கு இந்த வசனங்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த விரிவுரையின் மற்றொரு பிரிவில் மனித இனத்தின்; பண்பாடுகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் புடம்போட்டு அவர்களைப் புனிதர்களாக மாற்றும் பதினான்கு அடிப்படைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இக்கருத்தினை அல்குர்ஆனின் 17ம் அத்தியாயத்தின் 23 முதல் 37 வரை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
1.பெற்றோர்களிடம் நன்றியாக நடந்து கொள்ளுதல்!
என்னைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக. (17:23,24)
2.கூட்டுவாழ்க்கையில் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாயிருத்தல்!
3.ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உதவியாயிருத்தல்!
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர் (17:26)
4.இறைவன் வழங்கிய செல்வத்தை வீண்விரயம் செய்யாதிருத்தல்!
விரயம் செய்வோர் ஷைத்தான்தளின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (17:27)
5.செல்வத்தை செலவிடுதலில் கஞ்சத்தனமோ, ஊதாரித்தனமோ இல்லாமல் நடுநிலைமையை கையாளுதல்!
உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்! (17:29)
6.இறைவன் செய்திருக்கும் இயற்கையான வழிமுறைகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்!
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
7.வாழ்க்கைச் சிரமங்களுக்கு அஞ்சி மக்கள் தம் குழந்தைகளைக் கொல்லாதிருத்தல்!
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (17:31)
8.விபச்சாரம் மற்றும் அதனைத் தூண்டும் காரியங்களுக்கு அருகிலும் செல்லாதிருத்தல்!
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.(17:32)
9.ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது. ஆதலால் நியாமின்றி அதனைக் கொல்லாதிருத்தல்!
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார். (17:33)
10.அனாதைக் குழந்தைகளின் பொருளை பாதுகாத்தல் அநாதைக் குழந்தைகள் பருவம் அடைந்து தம்மைத் தாமே சுயபரிபாலனம் செய்து கொள்ளும் வரை அவர்களின் பொருளுக்குப் பாதுகாவலாயிருத்தல்!
அநாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! (17:34)
11.வாக்குறுதிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் மிகக் கவனாமாயிருத்தல்!
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (17:34)
12.அளவை நிறுத்தல்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல்!
அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. (17:35)
13.தீர்க்கமாக தெரியாதவரையில் சந்தேகமான விஷயங்ளின் அடிப்படையில் செயல்படாதிருத்தல்!
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.(17:36)
14.ஆணவமோ, மமதையோ, கர்வமோ கொள்ளாதிருத்தல்!
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (17:37)
இந்தப் 14 அறிவுரைகளும் அண்ணலாரின் பிரச்சாரக் கட்டத்தைக் கடந்து அரசியல்-ஆட்சி அதிகாரம் என்ற கட்டத்தை அடைவதற்காக அடியெடுத்து வைக்கப் போகும் தருணத்தில் அதற்கான அடிப்படைகளாகத் திகழ்கின்றன. எனவேதான் இப்போதனைகள் அண்ணலார் காணப் போகும் சமூக அமைப்புக்கான ‘மினி அமைப்பு நிர்ணயச் சட்டம்” போன்று அமைந்து விட்டிருக்கின்றன. இவைகளுடன் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது, முஸ்லிம்கள் அனைவருக்கும் ஐங்காலத் தொழுகைகளையும் இறைவன் கட்டாயக் கடமையாக்கினான்.
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!

அறிந்துகொள்ளுங்கள்.,
அகிலத்துப் படைப்பாளனை..!

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப் படுவதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:78)
எவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை உருவாக்கப் புறப்பட்டு விட்டனரோ அவர்கள், தமது செயல், எண்ணங்களுக்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதை தினமும் ஐந்து தடவை (தொழுகையில்) மறந்து விடாமல் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட இறையச்சமுடைய மனிதர்களால் தான் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது அருளப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்கிட முடியும். வல்ல அல்லாஹ் அத்தகைய இறையச்சத்தையும், மனத்துணிவையும், உளத் தூய்மையையும் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
அஜ்மல்

Related Post