சாதிகளின் தாக்கம் எந்த அளவு இந்துப் பண்பாட்டு தளங்களில் ஊறியிருக்கின்றது என்பதற்கு இந்து அமைப்பில் வெளிப்படையாகவே இருக்கின்ற சாதிவெறித்தனமான ஆளுகைகளே சாட்சியாய் இஐக்கின்றன. சாதிகள் இல்லையடி என்பது பாடல்களில் தொனிக்கும் வரிகளாகவே இருந்துவிட்டிருப்து இந்து சகூக அமைப்பின் சாபக்கேடாக இன்றும் தொடர்கின்றது.
இந்திய சாதி அமைப்புஇ பல சாதிகள் கொண்ட மக்களை உள்ளடிக்கியது.சாதிகள் பெரும்பாலும் மோசமான விளைவுகளை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. பாகுப்பாடுஇ ஒடுக்குமுறைஇ வேற்றுமை காண்பது என்று பல விளைவுகளை பெயரிட்டாலும் மனிதனுக்குள் கலந்துள்ள ஜாதிப்பித்து அவன் தலைகேறி மிருகமாக நடமாட வைக்கிறது. மனிதன் குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தபின்பு தான் ஜாதியின் அடையலாம் அவனுக்கு காணப்படும். தற்போது அவன் பிறக்கும் முன்பே என்ன ஜாதி வேண்டும் என்று தீர்மானிக்க படுக்கிறது ? வியப்பாக உள்ளதா எங்கே எப்படி என்று!
தற்போது திருமணமான தம்பதிகள் சிலருக்கு கருவுறாமை என்பது பிரச்சனையாக உள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லாத தம்பதிகளுக்கு தீர்வாக விந்து நன்கொடை மூலம் குழந்தை கிடைக்கும் பேறு பெரும் வாய்பாக அமைந்துள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லா பல தம்பதியினர் இதற்காக மருத்துவர்களை அணுகி தங்களுக்கு குழந்தை பேறு பெற சிகிச்சை மேற்கொள்கின்றனர். இங்கே தொடர்கிறது மனிதனின் ஜாதிவெறியின் அவலம்.
சமிபத்தில் ஹிந்தியில் வெளியான ‘ விக்கி டோனோர்’ என்கிற திரைப்படம் கூட விந்து நன்கொடையாளரை பற்றிய கதையை அடிப்படையாக கொண்டது. அதன் கதாநாயகன் மகப்பேறு வாய்ப்பு இல்லா பல தம்பதிகளுக்கு விந்து தானம் செய்து கருவுறாமை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முயலும் கதையை அடிப்படையாக கொண்டது. நானும் அந்த திரைப்படம் கண்டேன்இ கருவுறாமையாள் அவதியுறும் தம்பதிகளுக்கு நவீன காலத்தில் உள்ள மருத்துவத்தின் வாய்ப்புகளும் தேவையும் வெளிக்காட்டிய படம் என்றே கூறலாம். விந்து தானத்திற்கும் ஜாதிவெறி அவலத்திற்கும் எங்கே உள்ளது முடிச்சு என்று நீங்கள் கருத்தலாம். அதற்கு உங்களின் கண்முன்னே ஒரு பார்வைக்காக நான் படித்ததை உங்களிடம் பகிரும் உண்மை சம்பவம் இதோ.. இந்த கட்டுரை நான் எழுத காரணம் ஜாதி எவ்வாறு இந்திய மக்களின் மனவேருகளில் எவ்வாறு உள்வாங்கியுள்ளது என்பதை தோலுரித்து காட்டத்தான்.
பாட்னாஇ அதிக மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்தின் தலைநகரம். அங்கே டாக்டர் ஹிமான்சூ ராய் என்கிற மருத்துவர் விந்து வங்கியுடன் பிரபலாமான மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். விந்து நன்கொடைஇசெயற்கை மகப்பேறு என்பது நகர்புற மக்களிடம் அதை பற்றிய அறிவு இருந்தாலும் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு குறைவு என்றே சொல்லாம். தற்பொழுது கிராம புறங்களில் இருந்தும் பெரும்வாரியான குழந்தை பேறு வாய்ப்பு இல்லா தம்பதிகள் தங்கள் மகப்பேறு மருத்துவனைக்கு வந்து செயற்கை கருத்தரிப்பு முறை குறித்து ஆலோசனை சிகிச்சை பெறுவதற்கு ‘விக்கி டோனோர்’ என்கிற படம் கிராமபுற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு காரணமாக அமைந்து உள்ளது என்கிறார் மருத்துவர்.
உலகளவில் பெரும்பாலும் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஆரோக்கியம் பற்றியே அதிகளவில் மருத்துவரிடம் விசாரிப்பர். ஆனால் பீகாரில் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஜாதியை பற்றி கேட்பதாக மருத்துவர் கூறுகிறார். சிலர் விந்து கொடுப்பவரின் பண்பாடுஇ சுகாதாரம்இ உடல் அம்சங்கள்இ மதம் பற்றி கேட்பதைவிட சாதி பற்றியே அதிகமாக கேட்பதாகவும் அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினாமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மற்றொரு விந்து வங்கி நடத்தும் டாக்டர் சவுரப் குமார் அவர்களும் இதையே தெளிவுபடுத்தினார். இந்திய மக்களிடம் ஜாதிவெறி எந்த அளவிற்கு ஆழமாக வேருன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு ஆகும்.
சில விந்து வங்கிகளில் ‘பிராமணர்’இ பூமிஹார்’ ‘யாதவ்’இ’ராஜ்புத்’ மற்றும் பல சாதி ஸ்டிக்கர்கள் பெயரிடப்பட்ட குழாய்கள் அடையாளப்படுத்தி வகை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மருத்துவர் கூறினார். பீகார் மக்கள் சாதிஇசமூகம் மற்றும் கலாச்சாரத்தில் போன்றவற்றில் மிகவும் தீவிரமான வேட்கை உடையதால் பிரச்சனையின் உணர்வை மனதில் கொண்டு இப்படி செய்யவதாக மருத்துவர்கள் கூறினார்கள். பல கல்லூரி மாணவர்கள் விந்து கொடை செய்வதாக தெரிவித்த மருத்துவர்இ கொடையாளர்கள் ஒவ்வொரு தடவையும் விந்து தானம் செய்யும் போது விந்தின் வீரியத்திற்கு ஏற்ப பணம் கொடுப்பதாக தெரிவித்தார். 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விந்து கொடை செய்யும் நபர்களுக்கு பணம் கொடுக்கப்படுக்கிறது என்றார். (நன்றி: இந்திய இங்க்)
இத்தகைய தூய்மையான குழந்தை பேறு வேண்டி அர்பணிப்புடன் உள்ள இடத்தில கூட ஜாதிவெறி என்கிற சாக்கடையில் புழுக்களை போல உலவும மக்களால் புனிதத்தன்மை அசுத்தபட்டு விட்டது. அத்தகைய ஜாதி வெறியர்கள் தங்கள் ஜாதி இரத்தம் மட்டுமே தூய்மையானது என்கிற அறிவின்மையில் இருக்கலாம். பெரியார்இ அம்பேத்கார் போன்ற பல தலைவர்கள்இ ஜாதி எதிர்ப்பு பேச்சாளர்கள்இ எழுத்தாளர்கள் பலர் ஜாதி ஆகல பேசியும் செயல்பட்டும் இந்திய மக்களிடையே ஜாதியின் வீரியம் குறையவே இல்லைஇ அவனின் ரத்தத்தில் அது கலந்துள்ளது. குழந்தைகளுக்கு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி குழந்தைகளிடம் பொய் சொல்கிறோம்.. ஜாதிகள் இருக்கிறது…இந்திய மக்களின் ரத்தத்தில் அது கலந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.. ஆதனால் தான் ஜாதி என்கிற சொல்லில் கூட புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது.ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற பாரதியின் வரிகள் காகிதத்தில் மட்டுமேஇநடைமுறையில் நாம் பயணிப்பதோ வேறு! ஜாதிகள் அகல வேண்டும்இஅனைவரும் சமம் என்கிற நிலை வேண்டும்.
ஜாதி வெறி மனிதர்களுக்கு நான் எழுதிய கவிதை உங்கள் கண்முன்னே….
நீ எந்த ஜாதி என்று கேட்டா
பூமி உன்னை சுமக்கின்றது!
நீ எந்த மதம் என்று பார்த்தா
நிலம் நீர் கொடுக்கிறது!
நீ எந்த இனம் என்று அறிந்தா
காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது!
கல்விக்கும் வேலைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
அறிவும் செல்வமும் ஜாதியை பார்ப்பதில்லை!
பிறப்புக்கும் இறப்புக்கும் ஜாதியை பார்க்கிறாய்
ஜனனமோ மரணமோ ஜாதியை பார்ப்பதில்லை!
விளையாட்டிலும் வீரத்திலும் ஜாதியை பார்க்கிறாய்
சாதனையும் தைரியமும் ஜாதியை பார்பதில்லை!
நிறத்திற்கும் மொழிக்கும் ஜாதியை பார்க்கிறாய்
நோயோ புலமையோ ஜாதியை பார்ப்பதில்லை!
கோவிலுக்கும் கருவறைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இறைவனோ தீபமோ ஜாதியை பார்பதில்லை!
பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இசையோ கலையோ ஜாதியை பார்ப்பதில்லை
மூடன் ஏற்படுத்திய பிளவு மனிதனுள்
கீழ் ஜாதியாம் மேல் ஜாதியாம்
மேல் ஜாதி என்றால் உனக்கு சொர்கமோ!
கீழ் ஜாதி என்றால் உனக்கு நரகமோ!
சொர்கமோ நரகமோ அவையிரண்டும்
ஜாதியோ மதமோ பார்ப்பதில்லை
உன் புண்ணியக் கணக்கையோ
நீ செய்த பாவக் கணக்கையோ
இறைவன் பார்க்கிறான்! மதிப்பிடுகிறான்.
மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை
அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!
விழித்திரு மானிடா! விழித்திரு!!!
… அன்புடன் ஆயிஷா பாரூக்