இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? – 2
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?
உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக இறைவனுக்கு அர்பணித்தல்’ மற்றும் அமைதி என்று பொருளாகும்.
இஸ்லாம் என்பது பின்வரும் அடிப்படை விஷயங்களில் அமைந்ததாகும்.
1) வணங்கப்படுவதற்கு தகுதியுடைய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் முஸம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் என்றும் மனதால் நம்பிக்கைக் கொண்டு வாயால் உறுதி மொழிவதாகும்.
2) குறிப்பிட்ட நேரங்களில் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றுதல்
3)ரமலானில் நோன்பு நோற்பது
4) வருடாந்திர ஜக்காத் செலுத்துவுது
5) வசதியுள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது
எனவே,
ஈமான் என்பது: – ஒருவர் உள்ளத்தால் மேலே குறிப்படப்பட்ட ஆறு விஷயங்களில் நம்பிக்கைக் கொள்வதும்
இஸ்லாம் என்பது: –அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக ஒருவரின் சொல் செயல்கள் அமைந்து அதன்படி ஐந்து கடமைகளை நிறைவேற்றுதலாகும்.