அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! – 1

Originally posted 2018-01-01 10:18:37.

பிரபஞ்சம்..!

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!

அறிந்துகொள்ளுங்கள்.,
அகிலத்துப் படைப்பாளனை..!

அதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்களேன்..!

எத்துணை கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இத்யாதி.., இத்யாதி..!

மனிதர்களாகிய நாம் இந்த பூமிப்பந்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லை. நம் பூமிப் பந்தோ சூரிய குடும்பத்தில் (ளுழடயச ளுலளவநஅ) ஒரு சிறு பகுதி. சூரிய குடும்பமோ பால்வெளியில் (ஆடைமலறயல) ஒரு சிறு புள்ளி. பால்வெளியோ இப்பிரபஞ்ச பேரண்டத்தில (ருniஎநசளந) ஒரு சிறு புள்ளிக்கு சமமான அளவிலும் இல்லை.

இப்பொழுது கூறுங்கள்: இவைற்றையெல்லாம் படைத்தவன் எத்துணை உயர்வானவன், மகத்தானவன்.

அவன்தான் ஏக இறைவனாகிய அல்லாஹ். அவன் யாராலும் பெறப்படவில்லை அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை. அவன் தன்னுடைய பண்புகளால் முழு நிறைவு பெற்றவன். குறைகள் ஏதுமற்ற மாட்சிமை மிக்கவன். அவன் தன் படைப்புகளில் எவரையுமே உருவத்தில் ஓத்திருக்கவில்லை. அவன் இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலித்து நிர்வகித்தும் வருகிறான். புவியிலோ அல்லது வானங்களிலோ எதுவும் அவனுக்கு மறைந்திருக்கவில்லை! அவனை அறியாமல் ஒரு அணுவும் அசைவதில்லை. அல்லாஹ் தன் அடிமைகளாகிய மனிதகுலத்தின் மீது அளவு கடந்த இரக்கமும் பரிவும் கொண்டவனாக இருக்கிறான்.

இறைவன் தன்னை “திருக்குர்ஆனில்” இவ்வாறு விவரிக்கிறான் – (112:1-4)

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.

மேலும் திருக்குர்ஆனில் தன்னைப்பற்றி கூறும் பொழுது (2:255)

அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை. மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை. வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்.

தன்னை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும் என்று இஸ்லாம் கூறும் இத்தகைய இறைவனைமிகவும் கடுமையானவன் இரக்கமற்றவன் என்று சிலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.

ஆனால் உண்மையோ வேறுவிதமாக இருக்கின்றது….. 2

Related Post