இந்து வேதங்களின் ஆய்வு..!

–  இப்னு கலாம் 

க இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது

இந்து வேதங்களின் ஆய்வு..!

இந்து வேதங்களின் ஆய்வு..!

1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ”வித்” எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.
ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ”தரை வித்யா” என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.
ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.
வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.

2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.

இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.

உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.

சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.

3. புராணங்கள்
வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று
பவிஷ்ய புராணம்
ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ”ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் “முஹம்மது”

Related Post