இந்துத்துவம் Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு 1

Originally posted 2015-01-06 14:51:09.

–  இப்னு கலாம் 
இந்துத்துவம்  Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு 1
இந்து மதம்
இந்துத்துவம்  Vs இஸ்லாம் - ஓர் ஒப்பீடு

இந்துத்துவம் Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு

சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் “ஹிந்து” என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.
ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ”ஹிந்து” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.
மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.
ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ”வேதாந்திகள்” ஆவர்.
இஸ்லாம்-ஒர் அறிமுகம்
”ஸலாம்” எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.
இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.
இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ,கட்டாயம் செய்யவேண்டியது அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.
இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனேஅவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

 

Related Post