இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!

Originally posted 2018-03-16 17:55:49.

அஷ்ஷெயக் அல்முனஜ்ஜித்
ஸெய்யித் இஸ்மாஈல் இமாம் இப்னு யஹ்யா மெளலானா
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
இந்து வேதத்தில் முஹம்மத் நபி
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி

இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
இந்து வேதத்தில் முஹம்மத் நபி

 “நான் இந்து சமுத்திரத்தில் உள்ள மொரீஷஸ் நாட்டைச் சேர்ந்தவன்.  இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது? அது ஏன்? என்பது பற்றி தயை கூர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள்.” என்று இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு அஷ்ஷைக் அல்முனஜ்ஜித் அவர்கள்  பின் வருமாறு பதில் தருகின்றார்.
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ் ஏற்றுக் கொண்ட மதம் இஸ்லாம் ஒன்றுதான். எனவே இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியையும், மறு உலகில் பாதுகாப்பையும், வெற்றியையும் தரும் படியான ஒளி மயமான அல் குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தான். இவ்வாதத்தை உறுதிப் படுத்தும் ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் இஸ்லாம் வேதம் தன்னகத்தே வைத்துள்ளது.
வேதத்தின் ஆதாரமும், அதன் அத்தாட்சியும் மனிதனுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு விளக்கமாகவும், தெளிவாகவும் இருப்பதுடன், இது போன்ற ஒன்றை யாராலும் கொண்டு வர இயலாமல் இருப்பதும் அவசியம். அல்லாஹ்வின் வேதத்தை பொய்ப்பிப்பதற்காக மந்திர வாதிகள் கொண்டு வந்த வளுவற்ற பொய்யான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் என்ன என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனவேதான் தன் வஹீயை – வேதவாக்குகளைப் பெற்ற தூதர்களின் உண்மை நிலையை மக்களுக்கு உறுதி படுத்துவதன் மூலம், அவர்களின் மீது மக்கள்  விசுவாசம் கொள்ளவும், அவர்களைப் பின்பற்றவும் ஏதுவாக, அவர்ளுக்குப் பக்க பலமாக முஃஜிஸாத்துக்கள் எனும் அற்புதங்களையும், இன்னும் பல அத்தாட்சிகளையும் அல்லாஹ் வழங்கினான்.
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி

இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
இந்து வேதத்தில் முஹம்மத் நபி

இதன்படி இஸ்லாம் மார்க்கத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பல அற்புதங்களை வழங்கினான். நபியவர்கள் பெற்ற முஃஜிஸாத்துக்கள்- அற்புதங்கள் ஏராளம். இவை பற்றிப் பாரிய ஏடுகள் பல எழுதப்பட்டுள்ளன. எனினும் இந்த எல்லா அற்புதங்களிலும் மிகவும் மேலானது கண்ணியமிகு அல்குர்ஆனாகும். அவர்களால் இயலு மென்றால் சகல கோணத்திலும் இது போன்று பரிபூரணமான ஒன்றைக் கொண்டு வருமாறு  அல்குர்ஆன் அறபு மக்களிடம் சவால் விட்டது. ஆனால் சொல் வளம் மிகு அற்புதமான அல்குர்ஆன் போன்ற ஒன்றை சொல் வளத்திலும், இலக்கியத்திலும் உச்ச நிலையைப் பெற்றவர்கள் என்று வரலாற்றாசிரியர்களால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட குரைஷிக்குல அறபு இலக்கிய மேதைகளால் கூட கொண்டு வர இயலவில்லை.
மேலும் அல்குர்ஆனிலும், நபியின் வாக்குகளிலும் விஞ்ஞான கருத்துக்கள் பலவும் அடங்கியுள்ளன. எந்தவொரு மனிதனாலும் விஞ்ஞான கருத்தொன்றை முன் வைக்க வாய்ப்பில்லாத அந்த யுகத்தில், இத்தகைய விஞ்ஞான கருத்துக்கள் பலவற்றை அல்குர்ஆனும், நபியின் வாக்குகளும் முன்வைத்துள்ளன என்றால், அவை அல்லாஹ்வின் வேத வாக்கல்லாதிருக்க  இயலாது. இது அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். மேலும் அல்குர்ஆனில் மறைவான விடயங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. முன்னர், நபியவர்கள் சித்திர வரலாறு பற்றிய அறிவை பெற்றிருக்க வில்லை. அவ்வாறே அன்னார் வாழ்ந்த அந்நாட்டில், ஒரு சில கிறீஸ்தவ வேதக்காரர்களை, யூதர்களைத் தவிர வேறு எவரிடமும் இது பற்றிய அறிவு இருக்கவும் இல்லை. அவ்வாறான சூழ் நிலையில் அல்குர்ஆனும், நபியவர்களின் வாக்குகளும் பண்டைய காலத்தில் நடைபெற்ற சில மறைவான சம்பவங்கள் பற்றியும், பிற் காலத்தில் நடக்கவிருக்கும் மறைவான இன்னும் சில சம்வங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளன என்றால், அதுவும் அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு இன்னுமொரு  ஆதாரம்தான்.
மேலும், பின்பற்றுவதற்கு ஏற்றவாறு அற்புதமான அமைப்பில் சட்டங்களை அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. அதில் தனி மனிதனுடனும், குடும்பத்துடனும் சம்பந்தப்பட்ட சட்டங்களும், சர்வதேச உறவுகளும், சமூக நீதியும் எவ்வாறு அமையப் பெற வேண்டும் என்பதற்கு அவசியமான அடிப்படைகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி இருலோகத்தையும், மற்றும் மறைவான விடயங்கள், பாக்கியம், அபாக்கியம் பற்றிய விடயங்கள் பற்றிய தெளிவையும் அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. இத்தகைய அற்புதமான செய்திகள் யாவும் ஒரு உம்மி – எழுத, வாசிக்கத் தெரியாத நபியின் – தூதரின் வாயிலாக வெளி வந்துள்ளன. ஆகையால் இவை அவரின் வாய்மைக்கும், நம்பகத் தன்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். மேலும் அன்னாரின் இத்தகைய பண்புகளுக்கு அன்னாரின் தோழர்கள் மாத்திரமின்றி அன்னாரின் பகைவர்களும் கூட சாட்சி பகர்ந்தனர். இத்தகைய மாமனிதர் பதினான்கு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இஸ்லாமிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்குர்ஆனைத் தாங்கி வந்தார்.  …………2

Related Post