வல்ல இறைவனின் பணியாளர்கள்.., வானவர்கள்..!

இஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது.

இஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது.

ஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில்  வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது. இந்துக்களின் நம்பிக்கையில் பொதுவாக தேவதூதர்கள் எனப்படுகின்றவர்கள்இ வானவர்கள் எனும் பெயரில் பொதுவாக இருப்பவர்கள். ஆனால், இஸ்லாத்தில் கூறப்படும் வானர்களின் தன்மை முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் இறைவன் இட்ட பணிகளை ஆற்றுபவர்களாக இருப்பவர்கள்.! இஸ்லாத்தில் வானவர்கள் மீதான நம்பிக்கை குறித்த அம்சத்தை இனி காண்போம்..!

இறைநம்பிக்கையாளன் ஒருவன் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சங்களைக் குறித்து இந்தத் தொடரில் கண்டு வருகின்றோம். ஆந்த வரிசையில், கடந்த அமர்வுகளில் அல்லாஹ் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை குறித்து அறிந்தோம்.

அடுத்து நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சமாக அல்லாஹ்வின் பிரத்யேகப் படைப்புக்களான,  மலக்குகள் எனும் வானவர்களை நம்புவதைக் குறித்து இந்த அமர்வில் தங்ளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

பேரண்டத்தின்.., அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ், தான் அழகாய்ப் படைத்துப் பாதுகாப்பாகப் பரிபாலிக்கும் இந்தப் பரந்து விரிந்த பிரஞ்சத்தில், தனது விருப்பத்திற்கேற்பவும், பல்வேறு விதமான.., பவகையிலான.., நம் கற்பனைக்கும் எட்டாத வகையிலான மிகச் சிறந்த படைப்பினங்களைப் படைத்துள்ளான். ஆவற்றில் சிலவை எமது கற்பனையின் ஓரங்களில்கூட நிற்க முடியாதவை. ஆவற்றின் வகைகளும், எண்ணிக்கையும் கூட அவனையன்றி வேறு யார்தான் உணர முடியும்.., ஆம்..! இன்னும் ஏன்? நம்மைப் படைத்தவனும் அவன்தான்..!

அவ்வாறு நம்மைப் படைக்கும் முன்பே, அவனை வணங்கி, அவன் புகழ்பாடி, அவனுக்கு மட்டுடே சேவகம் புரிந்த கொண்டிருக்கும் ஒரு படைப்பை அவன் படைத்திருக்கின்றான். அந்த புதிய படைப்புதான்.., மலக்குகள்.. என்று வழங்கப்படும் வானவர்கள்..!

மனிதப் பார்வைகளுக்கு தெரிய வருபவைகள் சிலவே..! நாம் வாழும் நிலத்தில் ஊர்வன, வாழ்வன.., நீரில் நீந்துவன.., காற்றில் பறப்பன என உள்ளிட்ட பலவகை உயிரினங்களையும்.., அவற்றில் சிலவைகளை மட்டுமே நாம் காண்கின்றோம். மனிதத் தேடல் கண்டகொண்டவைகள் இதுபோல சிலவைதான். உலகில், நம் பார்வைகளுக்குப் புலப்படாமல் பல படைப்புக்கள் அவனால், படைக்கப்பட்டிருப்பது போல், நமது ஐம்புலன்களுக்குப் புலப்படாத, புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட்ட வகையிலான படைப்புக்களும் இருக்கின்றன.

கண்ணுக்குப் புலப்படும் படைப்பினங்களை வைத்தே, நாம் நமக்குத் தெரியாக இன்னபிற உலகப் படைப்புக்களை கற்பனை செய்து வியக்கின்றோம். இந்த நிலையில், புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட படைப்புக்களை அறிய நமது கற்பனைக் திரைகளை விரட்டிப் பார்த்தால், எமது சிந்தனைத் திறன்களின் சாட்டையை சற்று சுழற்றிப் பார்த்தால், நிச்சயமாக, திண்ணமாக, இறைபடைப்பின் வல்லமையைக் கண்டு வியந்து போவோம்.

இஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது.

இஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது.

இவ்வாறு நம் பார்வை புலன்களுக்கு அப்பாற்பட்ட வகையிலான, நம்மால் பார்க்க முடியாத வகையில் படைக்கப்பட்டிருக்கும் படைப்புக்களுள் ஒன்றாக. அல்லாஹ்வின் அழகிய படைப்பாக இருக்கும் வாழ்வினங்களுள்… படைப்பினங்களுள் ஒன்றுதான் இந்த அமர்வில் நாம் குறிப்பிட்டுள்ள நம்பிக்கை கொண்டுள்ள அம்சமான மலக்குகள் எனும் வானவர்கள் எனும் படைப்பு..!

அல்லாஹ்வின் இந்த இனத்தைப் பற்றி.., அவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டியஅ ம்சங்கள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன்.

வானவர்களை இறைவன் படைத்தது எவ்வாறு?? ஆம்..! மனிதப் படைப்பு போல் அன்றி, அல்லாஹ் வானவர்களை ஒளியால் படைத்தான். அவர்கள், தங்களுக்கு படைத்தவனால் இடப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றும் ஒரே நோக்கோடு படைக்கப்பட்டிருக்கின்றார்கள். தங்கள் படைப்பாளனாகிய ரப் ஆகிய அல்லாஹ்வினால், தமக்கு இடப்பட்ட பணிகளை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஏந்த நிலையிலும் அவர்கள், தமது இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாமல், அவனது கட்டளைகள் ஒவ்வொன்றையும் செவ்வனே, முழுக்க முழுக்க நடைமுறைப் படுத்தக்கூடிய அடிமைகளாக இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களைக் குறித்து அனைத்து அறிவுஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானதாகும்.

ஈமான் எனும் இறைநம்பிக்கைக்கான கிளைகளில் இரண்டாவதாக உள்ள மலக்குகள் எனும் வானவர்களை நம்புவது என்பது இல்லாமல்.., அவர்களை நம்பாமல் நமது ஈமான் முழுமை பெறவே முடியாது.

ஞருசுயுN 2:177

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும்.

இந்த வசனங்கள்.., இறைவசனங்கள் வானவர்கள் உள்ளனர் என்றும் அவர்களையும் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தௌ;ளத் தெளிவாக நமக்கு அறிவிக்கின்றன. அவர்களின் ஆற்றல் நம் ஆற்றலைவிடப் பல மடங்கானது. ஆனால், அந்த ஆற்றல் தன்மையால்.., அவர்களிடம் இறைத்தன்மையோ அல்லது இறைவனுக்குரிய தனிப்பட்ட பண்புகளோ அல்லது இறைமையில் பங்கோ கிஞ்சிற்றும் இல்லை. அல்லாஹ்வின் அந்த படைப்பினங்கள், அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி அவனுக்கு மட்டுமே நிரந்தர அடிபணிதலை, அதிகதிகமான வணக்க வழிபாடுகளை அவனுக்கு மட்டுமே செலுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

சரி, இந்த வானவர்களின் செயல்பாடுகள் எப்படி..? ஆம்.,! அவர்களின் செயல்பாட்டுத் திறமை இறைவன் ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதே தவிர அவனைத் தவிர வேறு எவரும் இந்த அற்புதப் படைப்பைக் குறித்து ஆராய முடியாது.

புகாரி எனும் பிரபல்யமான நபிமொழிக் கிரந்தத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக பதியப்பட்ட நபிமொழி ஒன்றில், வானவர்களின் அன்றாட ஒரு பணி குறித்து விவரிக்கும்பொது. ஆவர்களின் செயல்பாடுகளின் ஒரு பகுதி விளக்கப்ட்டுள்ளது. அதாவது. வானத்தில் ஒரு வீடு இருக்கிறது. அந்த அருள் மிக்க இருப்பிடத்துக்கு பைதுல் மஃமூர் என பெயர். ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குகள் எனும் வானவர்கள், அதனுள்; நுழைந்து வல்ல அல்லாஹ்வைப் போற்றித் துதித்துத் தொழுகின்றனர், அவன் புகழ் பாடி, போற்றிவிட்டு, பின் வெளியேறுகின்றனர். இந்த உலகம் முடிவுற்று, மறுமை நாள் வரை அவர்கள் மீண்டம் அதனுள் நுழையமாட்டார்கள்.,!அவ்வாறெனில், சற்று அவர்களின் எண்ணிக்கை குறித்து கற்பனை செய்து பாருங்கள்..! நிச்சயமாக, அல்லாஹ்வின்  இந்த வல்லமையின் அளவை நம்மால் எள்ளளவுகூட எடை போட்டு அளந்திட முடியாது.

அதேபோன்று சில வானவர்களின் தோற்றம் மற்றும் பலம் குறித்துகூட நமது சாதாரண புலன்களால் எடை போட முடியாது. திருக் குர்ஆனின் வசனங்கள் மற்றும், நபிமொழிகளில் வானவர்கள் குறித்த அம்சங்கள், சம்பவங்கள் அலசப்படும்போது நீங்கள் இதனைக் காண முடியும். அவர்களின் வல்லமைக்கு ஒரு சிறு சான்றாக ஒரு சில அம்சங்களைஇங்கு கூற விளக்கி விழைகின்றேன்.

பொதுவாக இறைத்தூதர்களின் பணியில் அவர்களுக்கு உதவும் இறைகட்டளையை வானவர்கள் நிறைவேற்றுவார்கள். இது தவிர, இறை நியதிக்கு மாற்றமாக, அநீதம் தலைதூக்கும் போதெல்லம், அல்லாஹ் வானவர்களைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியிருக்கின்னறான்.

அல்லாஹ்வை வணங்குவதற்காக இவ்வையகத்தில் முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயங்களில் முதல் ஆலயம் மக்காவில் இருக்கும் கஅபத்துல்லாஹ் என்பதை நாம் அறிவோம்..! அது ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பிறகு, இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்களால் புதுப்பிக்கப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்பட்டது. பிறகு நபி (ஸல்) காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஆதிஆலயமான இத்தகைய இறைஇல்லம் அமைந்த மக்காவை மறுமைநாள் வரை காப்பதற்காக என்று இறைவன் மலக்குகளை நியமித்துள்ளான். அந்த மலக்குகள் இறுதிநாள் நாள் வரை அனைத்து விதமான சேதங்கள், பாதிப்புக்கள் மற்றும் ஆபத்துக்களிலிருந்தும் மக்காவை பாதுகாத்துக் கொண்டேயிருப்பார்கள்.

Related Post