நோன்பு ஒரு கேடயம்..!

Originally posted 2015-06-21 20:25:31.

– முஸ்

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம்

கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

நோன்பாளிகளின் சிறப்பு

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
(ஸஹ்ல் (ரலி) புகாரி)

சுவர்க்கம் திறக்கப்பட்டு, நரகம் மூடப்படுகிறது ரமளான் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

நோன்பாளியின் மகிழ்ச்சி
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

Related Post